முதல் சனி என்பது மாதாவின் நாள். எங்கெங்கெல்லாம் முதல் சனி பக்தி அனுசரிக்கப்படுகிறதோ அங்கே அளப்பரிய ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். இது மிக எளிமையான பக்தி. குறைவான நேரங்கள் அதிகபட்சம் ஒரு மணி நேரம், திருப்பலி மற்றும் மாதாவோடு தங்கியிருத்தலைச் சேர்த்தால் மேலும் ஒரு அரைமணி நேரம் அதிகமாகும். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்களில் அளப்பரிய ஆசீர்வாதம் அந்த ஊர்களுக்கு/அந்த பங்குமக்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.
முதல் சனி என்பது நம்முடைய தேவைகளை கேட்கும் நாள் அல்ல. மாதாவுக்கு ஆறுதல் தரும் நாள். மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் கொடுக்கும் நாள். மாதாவுக்கு எதிரான ஐந்து நிந்தைகளைக் குறித்து வேதனைப்பட்டு அத்தாய்க்கு ஆறுதல் கொடுக்கும் நாள். என்ன ஐந்து நிந்தைகள்?
1. மாதாவின் அமல உற்பவத்திற்கு எதிரான நிந்தை (தப்பரைகள் போதிக்கப்படுகிற நிந்தை)
2. மாதாவின் கன்னிமைக்கு எதிரான நிந்தை ( இதற்கு எதிராகவும் நிறைய தப்பரைகளும், தேவ தூஷனங்களும் போதிக்கப்படும் நிந்தை)
3. மாதா கடவுளின் தாய் என்பதை மறுக்கும் நிந்தை.
4. மாதாவின் உண்மை பக்தியை சிறுவர் மற்றும் இளையோரிடமிருந்து அகற்றும் நிந்தை.
5. மாதாவின் பக்திப்பொருட்களை (ஜெபமாலை, உத்தரியம், மாதாவின் அற்புத பதக்கங்கள் போன்ற) அகற்றும் நிந்தை..
இந்த முதல் சனியை எப்படி அனுசரிப்பது?
ஆலயத்தில் மாலை 6.30 – மணிக்கு ஆரம்பிக்கலாம்.
1. முதலில் பங்குத்தந்தை திவ்ய நற்கருணை ஆண்டவரை கதிர்பார்த்திரத்தில் ஸ்தாபகம் செய்வார்.
2. நித்திய ஸ்துதிக்குரிய/நிலையான புகழுக்குரிய மூன்று முறை பாடப்படும்.
3. பாத்திமா ஜெபங்கள் “ என் தேவனே, நான் உன்னை விசுவசிக்கிறேன்” மூன்று முறை ஜெபிக்கப்படும். “ ஓ ! மகா பரிசுத்த தமத்திருத்துவமே ! ஜெபிக்கப்படும்.
4. ஒரு பதினைந்து நிமிடங்கள் திவ்ய நற்கருணையானவருக்கு ஆராதனை (பாடல்கள் மற்றும் ஜெபங்கள்).
5. அதன் பின்பு ஜெபமாலை ஜெபிக்கப்படும். ஒவ்வொரு பத்து மணிகளும் மாதாவின் ஒவ்வொரு நிந்தைகளுக்கெதிராக ஜெபிக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் அந்த நிந்தையை குறித்து விளக்கிவிட்டு அந்த பத்து மணிகளுக்கு சென்றுவிடலாம்.
6. சந்தோச, துக்க, மகிமை, ஒளி தேவஇரகசியங்கள். எது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
7. இடையில் மாதா பாடல் பாடலாம்.
8. ஜெபமாலை முடிந்தபின். மாண்புயர் பாடப்படும். அதன்பின் குருவானவர் திவ்ய நற்கருணை ஆசீர் வழங்குவார். அதோடு நற்கருணை ஆசீர் முடியும்..
9. மாதாவோடு தங்கியிருத்தல் : ஆண்டவர் இயேசு மாதா சம்மந்தபட்ட திருநிகழ்ச்சிகள், ஜெபமாலை தேவ இரகசியங்கள், ஆண்டவரின் திருப்பாடுகள் நிகழ்ச்சிகள் எதாவது ஒன்றை தேவமாதாவோடு தியானிக்கவேண்டும். ஒருவர் வழி நடத்துவார். மற்றவர்கள் கண்களை மூடி அமைதி காத்து தியானிக்க வேண்டும். கற்பனையாக மாதாவின் அருகில் அமர்ந்து மாதாவோடு திரு நிகழ்ச்சிகள் சம்பந்தபட்ட காட்சிகளை நினைத்துப்பார்த்து மாதாவோடு ஒரு பதினைந்து நிமிடங்கள் பேச வேண்டும்.
10. அதன் பின் திருப்பலி நடைபெறும். அதோடு நிறைவு பெரும்.
11. முதல் சனி அன்று குருவானவர் பாவசங்கீர்த்தனம் கேட்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. அந்த திருப்பலியில் நாம் பெரும் நன்மையை (நற்கருணையை) பரிகார நன்மையாக பெற்றுக்கொள்ள வேண்டும்..
முதல் சனி பக்திக்கு ஒன்றரை மணி நேரத்திலிருந்து அதிக பட்சம் இரண்டு மணி நேரங்கள் செல்வாகும்.
ஆனால் அதனால் கிடைக்கும் பலனோ அதிகம். முதல் சனி பக்தி முயற்சியை பங்குகளில் ஆரம்பிப்பதற்கு நிறைய தடைகள் இருக்கும். ஆனால் வெற்றிகரமாக ஆரம்பித்து தொடர்ந்து செய்தால் அளப்பரிய நன்மைகள், ஆசீர்கள் அந்த பங்குமக்களுக்கு கிடைக்கும்.
குறிப்பு : ஜெபமாலையையும், மாதாவோடு தங்கியிருத்தலையும் பொது நிலையினர் வழி நடத்தலாம். பீடத்தில் இருந்து அல்ல. மக்களோடு அமர்ந்து..
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுளின் தாய்க்கு நாம் ஆறுதல் கொடுத்தால் நம்மை வெறும் கையோடு அந்த தாய் அனுப்புவாரா? கண்டிப்பாக நமக்கு பரிசு உண்டு..
குறிப்பு : தலை வெள்ளி, முதல் சனி அனைத்து ஆலயங்களிலும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இது இயேசு சுவாமியும், மாதாவும் நம்மிடம் நேரிடையாக (புனிதர்கள் வாயிலாக) கேட்ட விசயங்கள். அவர்கள் கேட்டும் நாம் ஆறுதல் கொடுக்காவிட்டால் அந்த இருதயங்கள் எப்படி வேதனைப்படும்?
குறிப்பு 2 : முதல் சனி பக்தியை நடத்துவது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்க, சகோதரர் தன்ராஜ் ரொட்ரிகஸ், வாழும் ஜெபமாலை இயக்கம், சென்னை. Ph: 97909 19203.
உங்கள் பங்கில் ஆரம்பிக்க நீங்கள் தயாரா?